லாரி மோதி மூதாட்டி பலி.


இண்டூர் அடுத்த தளவாய்அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி ராமாக்காள் (வயது70). ராமாக்காள், ஆட்டுக்காரன் பட்டி பகுதியில் சாலையோரம் அம்மி கல் செதுக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வந்த அவர் தான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல சாலையை கடக்கும் போது பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற டிப்பர் லாரி மோதியதில். ராமாக்காள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


இது குறித்து தகவல் அறிந்து தருமபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form