குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் விசாரணை.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வினியோகம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.


பென்னாகரம் பேரூராட்சி ஏழாவது வார்டு எம் கே நகரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதிக்கு வருகை தந்த அதிகாரிகள் அருகில் இருந்த பொதுமக்களிடம் தினசரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருகின்றதா, குடிநீர் வினியோகத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிகழ்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பெண்ணாகரம் பேரூராட்சி பொருத்துநர் வேலவன் உடனிருந்தார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form