அரூர் ஒன்றியம், பெரியபட்டி கிராமத்தில் தனியார் கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடைகள் இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது இதனால் பொதுமக்களும் ஒன்று திரண்டு அவர்களுக்குள் நிதி திரட்டி சொந்த பணத்தில் அதே கிராமப் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு பொது குடிநீர் கிணறு தண்ணீரின்றி வறண்டு பாழடைந்து காணப்பட்டது. அந்த இடத்தை சுத்தம் செய்து அதே இடத்தில் கட்டிடம் ஒன்றைக் கட்டினர்.
பொதுமக்கள் சொந்த பணத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்று அரசு ரேஷன் கடையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு ரேஷன் கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரூர் ஒன்றிய சேர்மன் பொன்மலர் பசுபதி, பெரியபட்டி பஞ்சாயத்து தலைவர் சுசீலாரவி, மதியழகன், விஸ்வநாதன், வேடியப்பன், இளையராஜா, கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.