சிக்னல் டவரின்றி தவிக்கும் மாணவர்கள்.

அரூர் ஜுலை-6

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் இன்று வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மூடப் பட்டுள்ளது. ஆனாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதிப்பதால் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் கிளாஸ் நடைபெற்று வருகிறது. 

மாநிலம் முழுவதும் செல்போன் டவர் முழுமையாக கிடைக்காத மலை கிராமங்கள் ஏராளமாக உள்ளது. அந்தந்த மலை கிராம பகுதிகளில் செல்போன் டவர் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து மாணவ, மாணவிகள் மரங்கள், மற்றும் மலை குன்றுகளின் மீதும் அமர்ந்து ஆன்லைன் கிளாஸ்சில்  பாடங்கள் கவனித்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்பொழுது வெப்ப சலனம் மழை அடிக்கடி பேய்ந்தும் வருகிறது. 
 
தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் சித்தேரி, சிட்டிங்,  கீரைபட்டி, கோட்டப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளது. இதில் கீரைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோல் தூக்கி, தாதராவலசு,வள்ளிமதுரை, வாழைத்தோட்டம்  உள்ளிட்ட கிராம பகுதிகளில் செல்போன் டவர் இன்னும்  அமைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் படித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆன்லைன் கிளாஸ் மூலம்  நடத்தும் பாடங்களை பார்ப்பதற்கு  செல்போனுக்கு தேவையான டவர் கிடைக்கும் இடத்தை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம பகுதி அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்று மாணவர்களில் செல் போனில் பயன்படுத்தும் சிம் கார்டுகளுக்கு தகுந்தாற்போல் டவர் கிடைக்கும் இடங்களான மரக்கிளைகளின் மீதும், மலையில் மையப் பகுதியில் உள்ள கற்கள் மீதும், மரத்தின் அடியிலும், சிமெண்ட் வீடு உள்ள சிலருக்கு மொட்டை மாடியில் டவர் கிடைப்பதால் அங்கு அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு கவனித்து வருகின்றனர். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி ஆன்லைன் வகுப்பை பார்க்க வனப்பகுதிக்குள்  பெற்றோர்கள்  அனுமதிப்பதில்லை.

ஏற்கனவே இந்தப் பகுதி கிராம பொதுமக்கள் அவசரத் தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்க  செல்போன் டவர் இல்லாததால் தொடர்புகொள்ள முடியாத நிலையும், மற்றும்  பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது எனவே எங்கள் கிராம பகுதியில் செல்போன் டவர் வேண்டும் என 20 ஆண்டுகளாக  அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திவந்தனர். கடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்களது வாக்குகளை பதிவு செய்யாமல் புறக்கணித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form