வரலாற்று புகழ்பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை.

அரூர் அருகில் அமைந்துள்ளது தீர்த்தமலை, இந்த கிராம பகுதியில் அமைந்துள்ள தீர்த்தகிரி மலை மீது  எழுந்தருளியுள்ள தீர்த்தகிரீஸ்வரர்  ஆலயம் வரலாற்றுப் புகழ் பெற்றது. ராமாயண காலத்தில் ராமன், ராவணனை வதம் செய்தபோது அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொள்ளவே தோஷம் நீங்க இந்த தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து நீராடி தோஷம் நீங்குவதாக புராணம் கூறப்படுகிறது. ராமனால் அன்று உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்றுவரை ராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற ஒரே தலம் இந்த  தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை தமிழக அரசு சுற்றுலா தளமாக அறிவித்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு மலை மீது அமைந்துள்ள கோயிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது. புதிதாக ராஜ கோபுரம் ஒன்று அரசு கட்டிக்கொடுத்து, குடமுழுக்கு நடத்த வேண்டும்.  ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்டு சீரமைக்க வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form