மநீம சார்பாக நடைபெற்ற ஏணி போராட்டம்.


பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து சைக்கிள், மண் அடுப்பு வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தர்மபுரியில் முதல்முறையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தருமபுரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதையடுத்து தற்போது முதல்முறையாக வீதியில் இறங்கி பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுநாள்வரை பொதுமக்களின் குறைகளையும், அரசு மீதான தங்களது எதிர்ப்புகளையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கியே வந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, முதல்முறையாக அக்கட்சியினர் தருமபுரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


எரிபொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முதல்முறையாக ஆர்ப்பாட்டம்ஒன்றிய-மாநில அரசுக்கு எதிராக கோஷம்கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சைக்கிள் ஒட்டியும், மண் அடுப்பு வைத்தும், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form