தருமபுரி ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அனைத்து கொரோனா அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மாவட்டம் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் நேற்று நகரில் சாலையோரத்தில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் டவுன் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸ் எஸ்ஐ ஒருவருக்கும், வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் போலீஸ் எஸ்ஐ வணிகர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிது. இதுகுறித்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து எஸ்பி. கலைச்செல்வன் அன்று மாலை தர்மபுரி நகரில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும், விபத்து நடக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜவுளிக்கடைகள் நிறைந்த பகுதியான சின்னசாமி நாயுடு தெருவில் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் வணிகர்களுடன் ஆய்வு செய்த போது வணிகர்களுடன் சமரசம் செய்து கலந்தாலோசனை செய்தார்.
Tags:
தருமபுரி