மகத்தான செயல்கள் செய்யும் மீட்பு அறக்கட்டளை.

தருமபுரி மாவட்டத்தில் எங்கு ஆதரவற்ற நபர்கள் இருப்பதாய் அறிந்தாலும் அவர்களை மீட்டு அவர்களை சுத்தம் செய்து அவர்களை காப்பகத்தில் சேர்க்கும் உன்னத பணியை தொடர்ச்சியாக செய்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக (04.07.2021) ஞாயிற்றுக்கிழமை மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி சாலை ஓரத்தில் உறவினர்களால் கைவிடப்பட்டு அனாதையாக கிடந்த திரு .ராஜா மற்றும் வின்சென்ட் ஆகியவர்களை சமூக ஆர்வலர் திரு சத்யா S. சிவகுமார் அவர்களின் அழைப்பை ஏற்று தர்மபுரி மீட்பு அறக்கட்டளை சார்பில் மீட்டனர்.

இருவரையும் தூய்மை செய்து அவர்களுக்கு முகச்சவரம் மற்றும் குளிக்க வைத்தும் மற்றும் புதிய உடைகளை அணிவித்து அவர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்து தர்மபுரி மீட்பு அறக்கட்டளை திரு. பாலச்சந்திரன் மற்றும் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு பிரபு ஆகியோரின் உதவியோடு விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்திற்கு சிபாரிசு கடிதம் பெற்று திரு.ஜாபர் உசைன், மாரண்டஅள்ளி காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. 

வரும் வழியில் கோட்டப்பட்டி பகுதியில் சுற்றி திரிந்த 25 வயதுள்ள வட மாநிலத்தை பெயர் தெரியாதவரையும் தூய்மைபடுத்தி, முகச்சவரம் செய்து கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் கடிதம் பெற்று அவரையும் காப்பகத்தில் சேர்த்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், உதவி செய்த அன்புமிகு தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form