நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் நாடே முடங்கியது, இந்த முடக்கத்தில் எல்லாவித பணிகளும் நிறுத்தப்பட்டது, அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளும் கொரோனா (கோவிட் 19) தொற்று காரணமாக 24.05.2021 முதல் மூடப்பட்டிருந்தது. தற்போது தருமபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவினை தொடர்ந்து நாளை 13.07.2021 முதல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளும் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா (கோவிட் 19) தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தருமபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆய்வாளர் திரு. க. ஜெயராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் படி நாளை முதல் திறப்படும் உழவர் சந்தைக்கு வரும் உழவர்களும் பொதுமக்களும் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
தருமபுரி