ஆவின் பால் தரம் குறைகிறதா? பொதுமக்கள்,வியாபாரிகள், தொடர் புகார்!!!

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தினமும் சுமார் 25ஆயிரம் லிட்டர் ஆவின் பால் உற்பத்தி செய்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் தற்போது பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஆவின் பால் தரம் குறைந்து வருவதாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், ஆவின் பாலைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் உகந்த வகையில் இருப்பதால், மக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு தனி வரவேற்பு உண்டு.

இந்த மாதிரியான குற்றசாட்டை உடனே சரி செய்யவில்லை என்றால் ஆவின் பாலுக்கு என்று உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு ஆவின் பால் விற்பனை பெரும் சரிவை சாந்திக்கும் நிலை ஏற்படும்

இந்நிலையில் சமீப காலமாக, முன்பை விட, தற்போது, ஆவின் பாலின் தரம் குறைந்து வருவதாக,  தொடர் புகார் வருகிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி ஆவின் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form