தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி (ITI) பள்ளி சேர்க்கை அறிவிப்பு.

வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சிநிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு.


தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டு முதல்  அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் 01.07.2021 முதல் 28.07.2021 வரை வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு: 
  1. 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.  
  2. பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14. உச்சவரம்பு இல்லை.

கல்வித்தகுதி:

  1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு: கம்பியாள் (Wireman) (2வருடம்),  பற்றவைவர் (Weldler) (1வருடம்). 
  2. 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் : கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டட பட வரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் என்ஜின் (1வருடம்) கடைசவர் (2வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2வருடம்) 
ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2021ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் படி பதிவேற்றம் செய்யலாம்.


ஆண், பெண் விண்ணப்பிக்கும் முறை: 
மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட இணையதள முகவரியில் Rww.skilltraining.in.gov.in விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். இதர சேர்க்கை சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் WW.skilltraining.r.n.gov.in மூலம் தெரிந்துகொள்ளலாம். 

பதிவேற்றம் செய்யும்போது தேவைப்படும் ஆவணங்கள்.

  1. Original Certificate SSLC (or) 10 Pass 9th Mark.
  2. Original T.C.
  3. Original communitity certificate. 
  4. ஆதார் அட்டை
  5. அலைபேசி எண்கள்
  6. மார்பளவுபுகைப்படம்.-1. 
பயிற்சி காலத்தின் போது 
  1. பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையாக வழங்கப்படும். 
  2. இதைதவிர விலையில்லா பாடபுத்தகம்,
  3. விலையில்லா வரைபடகருவிகள், 
  4. விலையில்லாமடிகணினி, 
  5. விலையில்லா சீருடை, 
  6. விலையில்லா மிதிவண்டி, 
  7. விலையில்லா பேருந்து பயண அட்டை, 
  8. விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். 

ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதிவசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கும் விடுதி விரைவில் துவங்கப்படவுள்ளது.

எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் விண்ணப்பித்து தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு 9688675686, 8883116095, 9688237443 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.