கர்நாடகா அணை கட்டியதற்க்கு அதிமுக அரசின் மெத்தனமே காரணம் முன்னால் MLA செங்குட்டுவன் குற்றச்சாட்டு.
மார்கண்டேய நதியில் தடுப்பணை கட்டிய விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லாமல் அ.தி.மு.க ஆட்சி செயல்பட்டதாக, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவன் குற்றம்சாட்டியுள்ளர்.
இது தொடர்பாகக் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "தமிழ்நாடு - கர்நாடக வனப்பகுதியை ஒட்டி யார்கோல் எனும் இடத்தில் கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கட்டியுள்ளது.
இந்த தடுப்பணையின் காரணமாக மார்க்கண்டேய நதி தமிழ்நாட்டிற்குள் வருவது முற்றிலுமாக தடைபடும். மேலும் இந்த தண்ணீரை சார்ந்து இருக்கும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யாததால், கர்நாடகா தற்போது ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி அணையை முழுமையாக கட்டி முடித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த அதிமுக அரசின் கையாலாகாத தனம்தான்.
மேலும், தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் யார்கோல் அணை கட்டுவதற்கு தேவையான மணல், சிமென்ட், கற்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இந்த அனையால் பாதிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தான் அ.தி.மு.க அரசின் உதவியோடு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு அணை கட்டிய காலத்தில்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.கவை சார்ந்த கே.பி.முனுசாமி அமைச்சராக இருந்தார். ஆனால், அவரும் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றிய அரசு ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை புறக்கணிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Tags:
கிருஷ்ணகிரி