75வது சுதந்திர தின வைரவிழாவை புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

ரோட்டரி ஹாலில் தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தின வைரவிழாவை  புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

சுதந்திர இந்தியாவின் வைரவிழா தொடர்பான நாட்டுப்பற்று மிக்க விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தருமபுரியில் இன்று (25.08.21 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.  தருமபுரி சுழற்சங்க கூடத்தில் இக்கண்காட்சியை தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  டி.ஸ்ரீஹரி திறந்துவைத்தார்.  

அவர் பேசும் போது ‘ இளைய சமுதாயத்தினர் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு இப்புகைப்பட கண்காட்சி பயனுள்ளதாக அமையும். பல்வேறு இன்னல்களை அனுபவித்து நம் நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களை நாம் என்றும் போற்றுவோம்.” என்றார்.

இப்புகைப்பட கண்காட்சியில் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை உணத்தும் வகையில், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய்படேல், நேதாஜி சுபாசந்திரபோஸ் உள்ளிட்டவர்களின் விடுதலைப்போராட்ட நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.  

மூன்று நாட்களும் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் இக்கண்காட்சியை காண்பதற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்சியில் மாவட்ட சுழற் சங்கத்தை சேர்ந்த டி.என்.சி.மணிவண்ணன், சுந்தரலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன்,  களவிளம்பர உதவியாளர் எஸ்.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி துணை ஆளுநர் கோவிந்தராஜ்,முன்னாள் துணை ஆளுநர்கள் கிருஷ்ணன், கண்ணன், ரோட்டரி மிட்டவுன் தலைவர் குமரன், செயலாளர் சரவணன்,பொருளாளர் இளவரசன், ரோட்டரி முக்கிய பிரமுகர்கள் பிரதீப், விக்ரமன், சத்தியமூர்த்தி, வெங்கடேசன், இளம்பரிதி, சுகுமார் சௌந்தர பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் இப்புகைப்படக் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர். நமது நாட்டின் பெருமையையும், புகைப்படங்களையும், புகைப்படக் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக இப்புகைப்படக் கண்காட்சி இருந்தது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form