பால் குடிக்கும்போது புரையேறி புதுப்பெண்: சாவு போலீசார் விசாரணை.

பால் குடிக்கும்போது புரையேறி புதுப்பெண்: சாவு போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி, அண்ணா நகரைச் சார்ந்த முனுசாமி அவரது மனைவி லட்சுமி, தம்பதியினருக்கு நித்தியா(19) பிருந்தா(16) வைஷானலி(14) என்ற 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். முதலாவது மகள் நித்யாவை அருகிலுள்ள கைலாயபுரம் கிராமத்தில்  கேசவன் மகன் சத்தியமூர்த்திக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

கணவன் வீட்டில் வசித்து வந்த நித்தியா நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பால் குடிக்கும் பொழுது புரையேறி உடல்நிலை பாதிப்படைந்துள்ளது பதறிப்போன உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் நித்யா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தகவலின்பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form