ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு புறக்கணிப்பு போராட்டத்தால் பரபரப்பு.

தருமபுரி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுகவின் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி உடன் தாக்க முயன்றது கவுன்சிலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் போலீசார் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலாளரை கண்டித்து அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிடத்தில் நடைபெறுவதாக தெராவிக்கப்பட்டது. இதை அடுத்து திமுக அதிமுக பாமக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெண் மற்றும் ஆண் கவுன்சிலர்கள் 11 மணிக்கு கூட்டம் நடக்கும் இடமான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கூட்டத்திற்கு வந்த 15வது வார்டுதிமுக பெண் கவுன்சிலர் சங்கீதா என்பவரை பணியில் இருந்த எஸ் ஐ நாகராஜன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். அப்போது கவுன்சிலர் சங்கீதா எதற்கு அடையாள அட்டை கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது போலீசார் அவரை தரக்குறைவாக திட்டியதுடன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கவுன்சிலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஊராட்சி குழு தலைவர் யசோதாா மதிவாணன் தலைமையில் காவேரி, மாது, தீபா முருகன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர். இச்சம்பவம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form