வீதியில் வீணாகும் குடிநீர் சீரமைக்க கோரிக்கை.

அரூர் அடுத்த சட்டையம்பட்டி கிராமத்தில் மூன்று வாரங்களாக வீதியில் வீணாகும் குடிநீர் குழாய்யை சரிசெய்து தர கோரி மத்தியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இன்றுவரை குடிநீர் குழாய் சரிசெய்து தரப்படவில்லை. இதனால் சட்டையம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. வீதியில் வீணாகும் குடிநீரால் குடிப்பதற்கு கூட ஒரு குடம் தண்ணீர் கூட வரவில்லை என பொதுமக்கள்  புலம்பி வருகின்றனர். மேலும் உடனடியாக குடிநீர் குழாய்யை சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form