மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் - தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்.

தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் - தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம். 


தர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருகின்ற 11.09.2021ம் தேதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள். குடும்ப நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள் சமரசம் பேசி தீர்ப்பது தொடர்பாக 23.08.2021 அன்று மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் துறை அலுவலர்கள் சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் தொடர்பான சந்தேகங்களையும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.

மாவட்ட முதன்மை நீதிபதி. திரு.மு.குணசேகரன் அவர்கள் தலைமையிலும் மற்றும் சார் ஆட்சியர் திருமதி.சித்ராவிஜயன்(இ.ஆ.ப), தர்மபுரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.த.கலைச்செல்வன் (இ.கா.ப), அவர்கள் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரு.ஆர். ராஜ்குமார் முதன்மை குற்றவியல் நடுவர், அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நீதிபதிகள் திருமதி.யு .மோனிகா, மாவட்ட கூடுதல் நீதிபதி, திரு.சய்யத் பர்க்கத்துல்லா, அமர்வு நீதிபதி மகளிர் நீதிமன்றம், திரு.ஏ. மணிமொழி சிறப்பு மாவட்ட நீதிபதி (மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) திரு.ஏ.எஸ் ராஜா மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், தர்மபுரி, சார்பு நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள். காவல் துறை கூடுதல் மற்றும் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் துறை ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

திருமதி.பி.எஸ். கலைவாணி. செயலாளர் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், தர்மபுரி நன்றி உரை கூறி இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.


தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form