வனபகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு.

சூளகிரி வனபகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேலுமலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிள்ள வனபகுதியாகும். மேடு, பள்ளங்கள் காணப்படும் இந்த வனபகுதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் பல குற்ற சம்பவங்களும் விபத்துக்களும்  நடைப்பெறுகிறது.

இதை தடுக்கும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சூளகிரியை மேலுமலை வனபகுதியில் காவல்துறையினரால் கண்காணிப்பு உயர் கோபுர டவர் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு வாகனம் அமைக்க பூமி பூஜை நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் துனை காவல் கண்காணிப்பாளர் முரளி  அவர்களும் சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கணேஷ் பாபு ,ஆனந்த ஆகியோர் கலந்துகொண்டனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form