நுண்ணீர் பாசன விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் அரசின் மான்யத்தில் வழங்கப்படும் நுண்ணீர் பாசனக் கருவிகளை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், இக்கருவிகளை தவறான முறையில் விற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமெனவும் விவசாயிகளுக்கு அறிவுரையும், தவறான முறையில் விற்கப்படும் மான்யத்தில் பெற்ற நுண்ணீர் பாசனக் கருவிகளை வாங்கக்கூடாது என பழைய இரும்பு கடை மற்றும் பிளாஸ்டிக் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து வகையான பயிர்களுக்கும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் சிறு / குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் (அதிக பட்சமாக 2 எக்டர்), இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் (அதிக பட்சமாக 5 எக்டர்) குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி மற்றும் அதிக மகசூல் எடுக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நுண்ணீர் பாசனக் கருவிகள் அனைத்தும் குறைந்தபட்சம் 7 (ஏழு) ஆண்டுகளுக்கு பராமரித்திடவும், சொந்த பயன்பாடின்றி வேறு எவருக்கும் எந்த சூழ்நிலையிலும் விற்க கூடாது. இதனை மீறி விற்கப்படும் நிலையில் நுண்ணீர் பாசன கருவிகளை பழைய இரும்பு, பிளாஸ்டிக் கடை உரிமையாளர்கள் வாங்க கூடாது. நுண்ணீர் பாசன கருவிகள் அரசின் பொருள் என்பதால் மீறி விற்கப்படும் நிலையில் கண்டறியப்பட்டால் அவ்விவசாயிக்கு வழங்கப்படும் அரசின் பிற மான்யத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் இவ்வாறு விற்கப்படும் அரசின் மான்யத் திட்டத்தில் பெறப்பட்ட நுண்ணீர் பாசன கருவிகளை பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடை உரிமையாளர்கள் வாங்க கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறி வாங்கியது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் அரசின் மான்யத்தில் வழங்கப்படும் நுண்ணீர் பாசனக் கருவிகளை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், இக்கருவிகளை தவறான முறையில் விற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமெனவும் விவசாயிகளுக்கு அறிவுரையும், தவறான முறையில் விற்கப்படும் மான்யத்தில் பெற்ற நுண்ணீர் பாசனக் கருவிகளை வாங்கக்கூடாது என பழைய இரும்பு கடை மற்றும் பிளாஸ்டிக் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கியுள்ளார்கள். 

மேலும் மாவட்ட மற்றும் வட்டார வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் இத்திட்டம் எவ்வித குறைபாடுமின்றி சிறப்பாக செயல்பட கண்காணித்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form