தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் பக்தர்கள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மந்திகுளம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் குரும்பர் இன மக்களுக்கு சொந்தமான வீரபத்திரசுாவமி கோவிலில் வருடம்தோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போன்று ஊரில் காப்பு கட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்கள் நேர்த்திக் கடனாக பக்தர்களின் தலையில் அக்கோவில்  பூசாரி தேங்காயை உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அலங்காரம் செய்யப்பட்ட வீரபத்திரன்சாமிக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற கிராம பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form