அரூர் பகுதியில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு :எம்எல்ஏ பங்கேற்பு.

அரூர் அருகே தீரன் சின்னமலை 216 வது நினைவு நாளை முன்னிட்டு கீரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள  தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு  அரூர் தொகுதி அதிமுக  எம்எல்ஏ  சம்பத்குமார்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, கட்சிப் பொறுப்பாளர்கள் செண்பகம் சந்தோஷ், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரவுண்டானா பகுதியில் கோமமுக சார்பில் மரியாதை. 

தீரன் சின்னமலையின்  நினைவு நாளை முன்னிட்டு  அரூர் ரவுண்டானாவில் அவரது திருஉருவப்படத்திற்கு கொங்கு மக்கள் முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது.  மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரேம்குமார், மாணவரனி செயலாளர் அகரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form