மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்.

தமிழகத்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் "மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி" திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

மீனவர்கள், மீன்வளர்ப்போர், உதவிக்குழுக்கள் / கூட்டு பொறுப்புக் குழுக்கள் /மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் / தனிநபர் தொழில்முனைவோர் / தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பொது பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும். 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தருமபுரி மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், 1/165 A, ராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (அஞ்சல்) தருமபுரி 636705 (தொலைபேசி எண் : 04342 296623) என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:31.07.2021. மேலும், இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form