பல ஆண்டுகளாக பணி செய்து வரும் அர்சகர்களுக்கும் வயது வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழக அரசால் பணி நியமனம் செய்த அர்சர்களுக்கு பணி  வயது வரம்பு நிர்ணயம் செய்தது போல் பல ஆண்டுகளாக பணி செய்து வரும் அர்சகர்களுக்கும் வயது வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என திரைபட இயக்குனர் கௌதமன் பேட்டி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஊத்துக்குழி மலை மாதேஸ்லரன் திருக்கோயிலில் சத்யபாமா அறக்கட்டளை சார்பில்,  கோயில் கருவறைக்கான தமிழ் ஆகம பூசாரி பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் கௌதமன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.  இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

ஆகம பயிற்சி முடித்தவர்களுக்கு கோயிலில் பூஜை செய்கிற உரிமையை தமிழக அரசு வழங்கி உள்ளதை வரவேற்கிறோம்.  இவர்களுக்கு 60 வயது வரை மட்டும் கோயில்களில் பணி செய்ய  வயது வரம்பை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதை போன்று ஏற்கனவே பல ஆண்டுகளாக கோயில்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் வயது வரம்பை கொண்டுவர வேண்டும் என்றும், அனைத்து  சாதியினரும் அர்சகர்கள் ஆகலாம் என்கிற  அடிப்படையில் தான் இந்த பணி வழங்கப்படுகிறது.

அனைத்து சாதியினர் அர்சகர் அக ணேவ்டும் என்றால்  அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு   இடஒதுக்கீடு அடிப்படையில் பணி  ஆணை வழங்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி முடித்தவர்களையும்  உள்ளடக்க வேண்டும், பயிற்சி கொடுத்தவர்களையும்  இதில் சேர்க்க வேண்டும் அதே போல், அதற்கென தனிக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும் அல்லது  தற்போது உள்ள கல்லூரிகளில் வகுப்புகளை துவங்க வேண்டும்.  

கோமாளி ஒருவர் அனைத்து சாதியினரும், அர்சகர் ஆகலாம் என்கிற  பணி ஆணை வழங்கினால் சட்ட ரீதியாக தடுப்பேன் என தமிழக அரசை மிட்டுகிறார். இந்த பிரச்சனையில் தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டுக்கு இளைஞர்கள் போராட்டம் செய்தனர். அதே போல் நாங்களுக்கு தமிழக அரசுக்கு துணையாக நிற்போம். அந்த கோமாளிக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்இ  தமிழன் கட்டிய சிதம்பர நடராஜர் கோயில் தீட்சியற்களுக்கு சொந்தமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ரீதியாக  அவர்களிடமிருந்து  மீட்டு தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கோயில் இந்து அறநிலைத்துயினரின் கீழ் வர வேண்டும். 

கடந்த ஆட்சி  போல் இல்லாமல் இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை காப்பாற்று விதமாக அவர் செயல்பட வேண்டும். தமிழக  அரசு 100 நாள் கடந்த நிலையில்இ இதனை பாரதிய ஜனதா கட்சியினர் கொச்சை படுத்துகின்றனர்.  இவர்கள் கடந்த 7  ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு என்ன  செய்தார்கள்  என பதில் கூறி விட்டு  மற்றவர்களை பற்றி பேச வேண்டும்.  தமிழக  அரசு 150 நாட்கள்  தொடுவதற்க்குள் நீட் தேர்வு மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  வேண்டும்  என  தமிழக அரசுக்கு கோரிக்கை  வைத்த அவர்இ தமிழக அரசுக்கு எந்த அச்சுறுத்தல் வந்தாலும் தமிழர்கள் ஆதரவாக இருந்து தோள் கொடுப்போம் என கூறினார். 

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.