பீங்கான் இல்லாத மின்கம்பத்தில் மின் கசிவு: பறவைகள் உயிரிழக்கும் பரிதாபம்.

அரூர் அருகே பீங்கான் இல்லாத மின்கம்பத்தில் மின் கசிவு: பறவைகள் உயிரிழக்கும் பரிதாபம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நம்பிப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு அருகில் ஏரியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் பீங்கான் இல்லாத மின் கம்பத்தின் மின்கம்பியின் மீது அமரும் கிளி, காகம் குருவி உள்ளிட்ட  பலவகை பறவைகள் தினந்தோறும் மின்கசிவால்  உயிர் இழுந்து வருகின்றது.மின் கம்பத்தின் அருகில் நிற்பவர்கள் தெரியாமல் கம்பத்தை தொட்டால் மின்சாரம் தாக்குகின்றது.

அந்த மின்கம்பம் அமைந்துள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய பயந்து வருகின்றனர். விவசாய நிலங்களில் கூலி வேலை செய்ய வருபவர்களை நிலத்தின் உரிமையாளர்  மின் கம்பத்தின் அருகில் செல்லாதவர் அவர்கள்  பத்திரமாக பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத் துறை அந்தப் மின் கம்பத்தில் பீங்கானை பொறுத்தி பறவைகளின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form