இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தோல்வி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி.

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தோல்வி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி.


பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் கடந்த 2008-09 ல் போலீஸ் தேர்வில் கலந்து கொண்டுள்ளார். அதில் இவர் எழுத்து தேர்வு வரை சென்றுள்ளார். இந்நிலையில் எழுத்து தேர்வில் வெற்றி பெறவில்லை என தெரிகிறது. இவர் இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் விபரம், தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம், அவர்கள்பெற்ற மதிபெண்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டுள்ளார். 

ஆனால் தகவல் ஆணையரிடம் இருந்து எந்தவித தகவலும் இதுநாள் வரை வரவில்லை. இதனால் வேடியப்பன் தனது மனைவியுடன் இன்று இது குறித்து தர்மபுரி மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளார். மனு மாடியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் வேடியப்பன் மனைவி மோகனா மொட்டை மாடிக்கு சென்று அவர் திடீரென  மாடியில் ஏறி குதித்து  தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். கீழே குதிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாடிக்கு சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தனர். தகவலறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் சித்ரா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form