52நபர்களுக்கு வெட்டு மனை பட்டா மற்றும் 5நபர்களுக்கு இருளர் இன நபர்களுக்கு உடனடியாக சாதிசான்றிதழ்கள் உடனடியாக வழங்கிட முதல்வர் அவர்கள் உத்தரவிட்டத்தின் அடிப்படையில் இன்று வழங்கபடுகிறது, வீடு இல்லா இருளர் இன மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
பட்டா கிடைக்கப்பெற்ற 52 நபர்களுக்கு வீடு கட்ட உடனடியாக வழிவகை செய்யப்படும், மேலும் அப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும், 12 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் , 14 வகை மளிகை தொகுப்பும், ரூ.4000 கொரோனா நிதியும் வழங்கப்பட்டது. குடும்ப அட்டை பெற தகுதி உடைய அனைவருக்கும் முதலில் ஆதார் அட்டை வழங்கிட வாட்சியார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வர்கள் தெரிவித்தார்.