முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்.


ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ரூ.1.00 இலட்சம், தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10000/-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


இத்திட்டத்த்தின்படி 2020-21 ஆண்டிற்கான (காலம்:1 ஏப்ரல் முதல் 31 மார்ச் வரை) முதலமைச்சர் மாநில விருதுக்கான விண்ணப்பங்கள், தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் / விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடத்துநர் / நடுவர் / நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் 3 ஆண்டிகள் வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பனியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, இரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணபிக்கத் தகுதி பெறுவர். இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும், விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன்  இணைத்தல் வேண்டும் உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர் மேற்காணும் விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


விளையாட்டு போட்டிகளின் பட்டியல்.


1. ஒலிம்பிக் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள், உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுதோறும்) ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தேசிய விளையாட்டு போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும், அழைப்பு போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.


2. மாநில விளையாட்டு விருத்திற்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும், அதாவது உலகக் கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும், போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.


3. 2020-2021 ஆம் ஆண்டிற்கு முந்தய மூன்று ஆண்டுகளாக 01.04.2017 முதல் 31.03.2020 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும்.


4. விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி ஆய்வர் மூலமும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியயோர் உரிய வழிமுறைகளையும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் .


5. விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர் / வீராங்களைகளுக்கு மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கான  விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல் "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்கவேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதன்மை செயலர் / உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு சென்னை அவர்களுக்கு 15.07.2021க்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.


எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் / ஆசிரியர்கள், விளையாட்டு புரவலர்கள், நன்கொடையாளர்கள், நடுவர் ஆகியோர் இவ்விப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.