பெருகிவரும் கொரோனா பெருந்தோற்றில் அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் பலரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் வளங்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இந்த ஊரடங்கு பலரின் தினசரி உணவு தேவைகளை கேள்விக்குரியக்கியுள்ளது,
அதன் ஒரு பகுதியாக பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சியின் அன்பு பாலம் அமைப்புடன் தருமபுரியை சார்ந்த பிரபல கல்வி ஆலோசனை நிறுவனமான விஜய்ஸ் இன்போ மீடியா இணைந்து வத்தல்மலை பகுதி மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்களை இன்று வழங்கினர்.
இந்த நிகழ்வில் விஜய்ஸ் இன்போ மீடியா சதீஷ், ஆசிரியர் ராஜேந்திரன், நம்ம தருமபுரி நவீன், அவர் தர்மபுரி மாதேஷ், மொரப்பூர் வளர்ச்சி பிரதீப், தர்மபுரி மக்கள் செய்தி வெங்கடேஷ், நம்ம மொரப்பூர் அஸ்லாம், ரஜாக், விஸ்வா, அர்ஜுன், மாதேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி
ஐயா நன்றி ஓட்டபப்டி தர்மபுரி கொரானா கரணம்மாக நிதி நெருக்கடி உள்ளவர்களுக்கு உதவமுடியுமா இராமசாமிகவுண்டர் தெரு. தர்மபுரி.
ReplyDelete