சாக்கடையில் குடிநீா் குழாய்: சுகாதாரமற்ற குடிநீரை பருகும் கிராம மக்கள்.

தருமபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட நல்லாகவுண்டனஅள்ளி கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் குழாய் சாக்கடை கால்வாயையொட்டி ஆழமான பகுதியில் மண்ணில் புதைத்துள்ளதால், நீர் பிடிக்க பெண்கள் சாக்கடை கால்வாயில் இறங்கி கழிவு நீரில் குடத்தை வைத்து நீர் பிடிக்கின்றனர். மேலும் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், அதை குடிக்கும் மக்கள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் இப்பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து, அதன் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும்; கழிவு நீர் கால்வாயையொட்டி அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை அகற்றி, புதிய குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரசு அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form