கொரோனா பராமரிப்பு மையத்தில் உலக யோகா தினம்.

தருமபுரி மாவட்டம் செட்டிக்கரையிலுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் இன்று உலக யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா மருத்துவக் குழுவின் ஒரு அங்கமான இயற்கை மற்றும் யோகா மருத்துவ குழுவால் நோயாளிகள் அனைவருக்கும் மூலிகை பானம் மற்றும் முளைகட்டிய பயிர்கள் வழங்கப்பட்டது. 

மேலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மரு. G. முனுசாமி, BNYS, தலைமையிலான மருத்துவக் குழுவின் சிறப்பான பணிகளை கௌரவிக்கும் விதமாக செட்டிக்கரை கொரோனா மருத்துவக் குழு சார்பாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form