100 அடி விவசாய கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பலி.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பெரிய மாவடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பிரகாஷ் அவளது மகள் யோசிகா வயது (4) என்பவர் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் தகப்பனார் பெயர் கண்முடி என்பவரது சுமார் 100 அடி ஆழமுள்ள 35 அடி தண்ணீர் நிரம்பி இருந்தவிவசாய கிணற்றில்   மேற்கண்ட யோசிகா (4) வயது குழந்தை விழுந்து விட்டதாகவும் மீட்புப் பணிக்கு வருமாறு இன்று 26/07/2021 ‌‌காலை தகவல் கிடைத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய  அலுவலர் மா.பழனிசாமி அவர்கள் தலைமையில் குழுவினருடன் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் விரைந்து சென்று மீட்பு இடம் சென்று பார்த்தபோது மேற்கண்ட விவசாய கிணற்றில் குழந்தை தீயணைப்புத்துறை பணியாளர்களால் கயறுமூலம் இறங்கி தேடிப் பார்த்ததில் குழந்தை கிடைக்கப் பெறவில்லை.

மேலும் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கிணற்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஓரளவுக்கு வெளியேற்றப்பட்டு தீயணைப்புத் துறை பணியாளர்கள் மீண்டும் கிணற்றில் இறங்கி இறந்த  நிலையில் இருந்த 4 வயது குழந்தையை மீட்டு சம்பவ இடத்திற்கு வந்து இருந்த கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தண்ணிர் அதிகம் இருந்ததாலும் மீட்புப்பணி தடைபட்டது சுமார் 3 மணி நேரம் போராடி குழந்தையை மீட்டு வரப்பட்டது குழந்தை இன்று சுமார் காலை 10:00 மணிக்கு விழுந்து விட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து கம்பை நல்லூர் காவல் துறை விசாரணை செய்து வருகின்றனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form