தருமபுரி மாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு 181 என்கின்ற கட்டணமில்லா தொலைபேசி எண்னை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது, இந்த திட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தலா இரண்டு பெண் காவலர்கள் என நியமிக்கப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் உதவி மையம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்., இ.கா.ப அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த உதவி மையத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்ட அனைத்து மகளிர் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களும் உதவி மையம் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் இடங்களிலிருந்தே பதிவேற்றம் செய்ய ஏதுவாக மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன்.இ.ஆ.ப மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.நாகலட்சுமி மற்றும் சுகாதார துணை இயக்குனர் மருத்துவ திரு.ஜெமினி ஆகியோருடன் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு மற்றும் திரு.புஷ்பராஜ் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த மகளிர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.