கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தங்கள் பகுதிகளில் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி அறிவுறுத்தினார். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, முதற்கட்டமாக ஓசூர் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பேரிகை, பாகலூர் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஓசூரில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலந்து கொண்டு, ஒரு போலீஸ் நிலையத்திற்கு 3 போலீசார் வீதம் 18 பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். பின்னர் போலீசாரின் ரோந்து பணியை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டன