சிறுமி கடத்தல்; 4 பேர் போக்சோவில் கைது.


பாப்பிரெட்டிப்பட்டி அருகே குமரக்கோட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது சிறுமி. கடந்த 30 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வித்யா மீண்டும் வீடு திரும்பவில்லை.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வித்யாவை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து உடனடியாக பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வித்யாவை தேடி வந்தனர். விசாரணையில், அடிமலை புதூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது சென்னப்பன் என்பவர் வித்யாவை கடத்தி சென்று மேச்சேரியில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.


இதனை அடுத்து காவல் துறையினர் மேச்சேரிக்கு சென்று வித்யாவை மீட்டனர். இதன் பின்னர் சென்னப்பன் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுகவனம், சித்தப்பா ரவிக்குமார் ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form