சாலையில் சேதமடைந்த மின் கேபிள்கள்.


தருமபுரி 
, பைபாஸ் சாலையில், சேதமான நிலையிலுள்ள மின் கேபிளை, நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நான்குரோட்டில் இருந்து பாரதிபுரம் வரை, நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலையின் நடுவே மின்கம்பங்கள் அமைத்து, அதை பராமரித்து வருகின்றனர். 


தருமபுரி வள்ளலார் மைதானம் அருகே, சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில், தடுப்புகள் அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில், மின் கம்பங்களின் இணைப்பு மின்கேபிள் சாலையில் அப்படியே போடப்பட்டுள்ளது. இதன் மீது, இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஏறிச்சென்று வருகின்றன. இதனால், மின் கேபிள் சேதமாகி, மின்சாரம் செல்லும் மின் கம்பிகள் வெளியே தெரிகின்றன. 


தறுமபுரியில், தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், இதிலிருந்து மின்சாரம் பாய்ந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஒருவாரத்துக்கு முன், இதில் மின்சாரம் பாய்ந்து கேபிள் தீப்பிடித்து எரிந்தது. ஆனாலும், நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களின் நலன்கருதி திறந்த நிலையில் மின்சாரம் சென்று வரும் இந்த மின்கேபிளை, பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form