நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறையில் உள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அரூர் ஒன்றியம், கீரைபட்டி பஞ்சாயத்து, வாழைத்தோட்டம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் செல்போன் வசதி இல்லாததால் அப்பகுதியில் மண்வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருவதும், மாடுகளை மேய்த்தும், விவசாய பணியிலும், ஈடுபட தொடங்கி உள்ளனர். மேலும் வனப்பகுதியில் கிராமம் அமைந்துள்ளதால் கைக்கு கிடைக்கும் அணில் உள்ளிட்டவை பிடித்து அதை சுட்டு தின்று பொழுதை கழித்து வரும் சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Tags:
அரூர்