மினி லாரி மோதி, பொறியாளர் சாவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில்  சந்தோஷ் குமார் என்ற சிவில் இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். சந்தோஷ்குமார் போச்சம்பள்ளியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.அடுத்து இவர் அக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த மினி லாரி சந்தோஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

தகவலறிந்த மத்தூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சந்தோஷ் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரான அண்ணாதுரை என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form