காவேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து.


கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில்  இன்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. 


கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்றன. குறிப்பாக  குடகு, பாகமண்டலா, தலைக்காவேரி, சிக்மங்களூர், உடுப்பி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கர்நாடகா கடலோர பகுதிகளிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு காவிரி ஆறு வழியாக நீர்  அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 15 ஆயிரம் கன அடி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு தற்போது 5 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. நேற்று திறக்கப்பட்ட 20 கன அடி உபரிநீர் நாளை காலை நேரத்திற்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வந்தடையும் என கருதப்படுகிறது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form