மனைவிக்கு கத்தி குத்து; கணவன் கைது.


நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 42). லாரி டிரைவர். இவருடைய மனைவி அரவிந்தா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு ஏற்பட்டது. 


இதனால், கணவரிடம் கோபித்துக்கொண்டு அரவிந்தா பூரிக்கல் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று கிருஷ்ணன் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், மனைவியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form