ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு, பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு, பாதுகாப்பு குறித்து  மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த மூன்று தினங்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காவேரி  ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், தற்பொழுது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஒகேனக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் மெயின் நீர்வீழ்ச்சி செல்லும் பாதை, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது  அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form