அரூர் தாலுகா ஆபிஸ் எதிரில் இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்தும், கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு பொது முடக்கம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக வாடகை இன்றி வருமானம் இல்லாமல் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வாகனங்களுக்கு இன்ஷரன்ஸ், ரோடு டாக்ஸ், எஃப்சி போன்றவற்றை புதுப்பிக்க போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். எனவே அவற்றை செலுத்துவதற்கு அரசு அவகாசம் வழங்கவும், கடந்த அரசு கொரோனா நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கியது. தற்போது உள்ள அரசு நிவாரணம் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:
அரூர்