இதுகுறித்து பெரியநாயகம் மணல் அள்ளி கடத்துவதை தட்டிக்கேட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் தொடர்ந்து மணல் அள்ளி கடத்தவதை தெடர்ந்து செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மணல் கடத்தலை தனக்கு சொந்த பாதை பாதையில் பயன்படுத்த வேண்டாம் என்று பெரியநாயகம் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பெரியண்ணன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து ஆறுமுகத்தை ரத்தம் சொட்ட சொட்ட கடுமையாக தாக்கி உள்ளனர். இதனை தடுத்த பெரியநாயகம் குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் இருவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் கொள்ளையர்களால் தங்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பெரியநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.