பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மா. பழனி காமராசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது மாணவர்களிடம் கொரோனா நோய்தொற்று காலத்தில் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களை கவனித்து அதில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும்.
காமராசரின் இந்த பிறந்த தினத்தில் கல்வியில் முன்னேற்றம் காண தற்போது உள்ள சூழலில் கற்பதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள் பழனிச்செல்விமற்றும் திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.