கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை; காவல்துறை விசாரணை.


பொம்மிடி அருகே உள்ள பில் பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவரது மனைவி சுலக்சனா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.


மகன் பெற்றோர்களை விட்டுவிட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை கிருஷ்ணனும், அவரது மனைவி மனைவியும் வீட்டு வாசல் முன்பு கழுத்து அறுபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைக்காக நடந்த கொலையா? அல்லது சொத்து பிரச்சனை தகராறில் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுகுறித்த தகவலறிந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் எந்த வழியாக சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். வயதான தம்பதிகள் இருவரும் இன்று அதிகாலை கொலையுண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form