கர்நாடகத்தில் கனமழைஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

*ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு  இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது*

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 109 கன அடி உயர்ந்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 696 கனஅடியாக அதிகரித்துள்ளது.

முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 38.38 அடிகள் இருப்பு வைக்கப்பட்டு அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோர விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form