தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் நேற்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
உலக உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மக்கள் தொகை விழிப்புணர்வு தின உறுதிமொழியை மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். சுகாதாரத்துறையின் சார்பில் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) (பொறுப்பு) மரு.ரமேஷ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மரு.முருகன், மருத்துவப் பணிகள் (தொழு நோய்) துணை இயக்குநர் மரு.புவனேஷ்வரி, மருத்துவப் பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் மரு.ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
தருமபுரி