அரூர் அருகே கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது சித்தேரி மலை கிராம பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தில் 62 மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். விவசாயமே இவர்களது பிரதான தொழிலாகும் அதில் ஒன்றுதான் மாம்பழம் விவசாயம். நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் அல்போன்சா, பித்தர, பெங்களூரா, செந்தூரா, நீளம், மல்கோவா உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் மகசூல் செய்யப்படுகிறது.சித்தேரி மலைப்பகுதி மாம்பழத்திற்கு சேலம் மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு.
கடந்த ஆண்டு நன்கு விளைச்சல் கொடுத்தது.அப்பொழுது ஒரு டன் ரூ.2000 விற்பனையானது. கடந்த ஆண்டு 1 கிலோ பெங்களூரா மாம்பழம் ரூ. 100 விற்பனையான. தற்பொழுது ரூ.60 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரூ. 60 விற்பனையான மல்கோவா ரூ. 40 க்கு விற்பனை நடைபெறுகிறது. மாம்பழம் ரகங்களுக்கு தகுந்தார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விளைநிலங்களில் மரங்களில் உள்ள மாம்பழம் பருவ நிலைக்கு வரும் பொழுது அதன் வாசனையை கண்டறிந்து சில வகை தேனீக்கள் மாம்பழத்தை தாக்கி உறிஞ்சும் பகுதியில் ஒரு வகையினர் புழுக்கள் உருவாக தொடங்குவதால் மரத்திலேயே மாம்பழம் அழுகும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டும் நன்கு விளைந்த மாம்பழங்களை இதுபோன்று தேனீக்கள் தாக்கப்படுவதால் அந்தப் பகுதியில் உருவாகும் புழுக்கள் மூலம் மரத்திலேயே மாம்பழம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு ஒரு டன் விளைந்த மாம்பலம், தற்பொழுது அரை டன்னாக மாறி உள்ளது. இதனால் நட்டம் ஏற்பட்டுள்ளது. சித்தேரி மலையில் விளையும் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறோம்.
கடந்தாண்டு ஒரு கிலோ 100 ரூபாய்க்குக் விற்பனையான பெங்களூரா தற்போது ரூ. 60 க்கும், 60 ரூபாய்க்கு விற்பனையான மல்கோவா ரூ.40 க்கும், விற்பனை செய்யப் படுகிறது. மற்ற ரக மாம்பழங்களுக்கு குறைவாகவும், சற்று கூடுதலாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நன்கு விளைந்த பருவ நிலையை அடையும் மாம்பழங்களை,தேனீக்கள் உறிஞ்சி பகுதியில் புதிதாக உருவாகும் புழுக்களால் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்படுவது வேதனை அளிக்கிறது, மறுபுறம் விலை குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. மாம்பழங்களை தேனீக்கள் தாக்கும் பகுதியில் புதிதாக உருவாகும் புழுக்களால் பழம் அழுவதை தடுக்க விவசாயத் துறை மருந்து வகைகள் கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.