வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரை அனாதையாய் தவிக்கவிடும் இந்த காலத்தில் கைவிடப்பட்ட முதியோர்களையும் மனநலம் பாதிக்கப்பட்டோர்களையும் மீட்டெடுக்கும் மனிதநேயமுள்ள காவலர்.
திரு_பிரபு_காவல்_உதவி_ஆய்வாளர், ஆயுதப்படை, தருமபுரி மாவட்டம்.ஓய்வறியா இந்த காவல் பணியிலும் கிடைக்கும் சில மணி நேரங்களில் தனது நண்பர் மீட்பு அறக்கட்டளை திரு.பாலச்சந்தர் என்பவருடன் இணைந்து பாதுகாப்பின்றி சுற்றித் திரியும் முதியோர்களையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டெடுப்பதையே தனது சேவையாகக் கருதி செய்து வருகிறார்.
29.06.2021 அன்று செவ்வாய்க்கிழமை சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட அனாதையாக சிகிச்சைபெற்று வந்த பெயர் தெரியாத மூன்று நபர்களை மீட்பு அறக்கட்டளை திரு.பாலச்சந்தர் அவர்களுடன் இணைந்து ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் மூன்று நபர்களையும் மீட்டு முகச்சவரம் செய்து, குளிக்க வைத்து, உடைகள் மாற்றி மருத்துவ பரிசோதனை செய்து காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுவரை கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என 25 நபர்களை மீட்டெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிழிந்த சட்டையும், வளர்ந்த தாடியும், உடல் முழுவதும் அழுக்குடனும் சுற்றித்திரியும் இவர்களை மீட்டு காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் முடி திருத்தம் மற்றும் முகச் சவரம் செய்தும், குளிக்க வைத்து, கிழிந்த ஆடைகளை வீசிவிட்டு தூய்மையான ஆடைகளை உடுத்தி உணவு கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்து தன்னுடைய சொந்தக் காரில் அன்பு இல்லங்களுக்கு அழைத்துச் சென்று சேர்த்து அவர்களுக்கென ஒரு அடையாளத்தை வழங்கும் நல்ல எண்ணங்களுக்கு சொந்தக்காரர் இவர்.
Tags
தருமபுரி