ராமகிருஷ்ணா மடம் சார்பில் விதவை பெண்களுக்கு உதவி.


சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு நாளினையொட்டி, சென்னை ஸ்ரீ இராம கிருஷ்ண பரமஹம்சர் மடம் சார்பில் தருமபுரி மாவட்டம், நாகர்கூடலில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த 40 விதவைப் பெண்களுக்கு தலா ரூபாய் 1000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சிக்கு நாகர்கூடல் பஞ்சாயத்து தலைவர் குமார் தலைமை தாங்க, சுவாமி விவேகானந்தா நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சகோதரி வசந்தராணி முன்னிலை வகித்தார்

முன்னதாக சொர்ணலதா, புஷ்பலதா மற்றும் ஸ்ரீ ராஜ் இறை வணக்கம் செலுத்தினர்.     

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தகடூர் இளைஞர் சங்கமம் சார்பில் தகடூர் பிறைசூடன் மற்றும் தகடூர் சந்துரு ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். நிறைவாக நாகர்கூடல் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form