DNT கணக்கெடுப்பை விரைந்து நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்.

DNT கணக்கெடுப்பை விரைந்து நடத்தக்கோரி சீர்மரபினர் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜீவ் நகரில் சீர்மரபினர் நல சங்கம் சார்பாகவும் மற்றும் அதன் தோழமை சங்கங்கள் சார்பாகவும் DNT கணக்கெடுப்பு நடத்த முதல்வர் அறிவித்ததையடுத்து விரைந்து அந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் நல சங்க செயல் தலைவர் ராமசாமி  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் மாவட்ட தலைவர் ஜெயவீரன் சிறப்புரையாற்றினார் முதலமைச்சர் அறிவித்த படி DNT கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது போயர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் ரவி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.


நரிக்குறவர் மேம்பாட்டு கழகம் ஜல்கேஸ் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போயர் முன்னேற்ற நலச்சங்கம் பொறுப்பாளர்கள் நரிக்குறவர் மேம்பாட்டு கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்றனர்

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form